பெரியகுளத்தில் பாஜகவுக்கு எதிராக போஸ்டர் - காவல்நிலையத்தில் புகார்
தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொறுப்பில் உள்ள நிர்வாகிகளின் புகைப்படத்துடன் நீக்கிடு நீக்கிடு வசூல் மன்னன் ராஜபாண்டியை நீக்கிட்டு, தூண்டாதே தூண்டாதே போராட்டத்தை தூண்டதே என்றும், எதிர்க்கட்சிக்கு விலை போனதும் தொண்டர்களின் தலையை அடகு வைத்து கமிஷன் - கலெக்சன் பாஜக அலுவலக கட்டிட நிதி மோசடி மன்னன் ராஜபாண்டியை ( ஊராட்சி மாவட்ட கவுன்சிலர்) தேனி பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளராக நியமித்ததை கண்டித்தும், இவருக்கு துணையாக உள்ள பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் பிசி.பாண்டி மற்றும் முன்னாள் கோட்ட பொறுப்பாளர் காதலின் நரசிங்க பெருமாள் உள்ளிட்டோரை நீக்கக்கோரி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.
இந்த நிலையில் தேனி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ராஜபாண்டி மற்றும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சுவரொட்டிகளை ஒட்டி அவதூறு பரப்பி வரும் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் பொறுப்பாளர்களான செந்தில்குமார் மற்றும் முருகதாஸ் ஆகியோர் பாரதிய ஜனதா கட்சிக்கு கலங்கம் விளைவித்து கெட்ட பெயரை ஏற்படுத்தும் விதமாக அவதூறு பரப்பி, சுவரொட்டிகளை ஒட்டி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நல்லு அவர்களிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.