முதுகலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்!

முதுகலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்!

முதுகலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்.

தேர்வு மையங்களை அருகிலேயே ஒதுக்கிட வேண்டும்-முதுகலை ஆசிரியர்கள் வேண்டுகோள்!
கோவை:மார்ச் ஒன்றாம் தேதி முதல் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொது தேர்வுகள் துவங்க உள்ளன. இந்நிலையில் கோவையில் முதுகலை ஆசிரியர்கள் தேர்வு பணிகளுக்கு செல்லும் தேர்வு மையங்கள் மிகத் தொலைவில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பல்வேறு ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிய இருப்பதாகவும் எனவே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிற்குள் இருக்கின்ற பள்ளிகளில் தேர்வு மையத்தை ஒதுக்கி தர வலியுறுத்தி கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் தமிழ்நாடு முதுகலை ஆசிரியர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.ஆனால் பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாததால் நாளை முதல் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய அவர்கள் தேர்வு மையங்கள் மிக தொலைவில் இருப்பதால் இருப்பிடத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு செல்லும் நேரமே இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகும் எனவும் அங்கு தேர்வு பணிகள் முடியும் வரை காத்திருந்து வீடு திரும்ப வேண்டும் எனவும் அதற்கு மறுநாளே மறுபடியும் தொலைதூரம் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும் என்பதால் தேர்வு மையங்களை அருகாமையிலேயே மாற்றித் தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

Tags

Next Story