போர்களமான நகராட்சி கூட்டம் - மயிலாடுதுறையில் பரபரப்பு
நகராட்சி கூட்டம் ஒத்திவைப்பு
திமுக கவுன்சிலரை தவறாக பேசியதால் பாமக், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி கூட்டம் நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது நகர்மன்ற உறுப்பினர்கள் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.திமுக கவுன்சிலர் பாஸ்கரை பற்றி நகராட்சி ஆணையரிடம் தவறாக கூறியதாக கூறி அதிமுக,பாமக,தேமுதிக கவுன்சிலர்கள் சேர்ந்து மற்றொரு தரப்பில் உள்ள அதிமுக,திமுக கவுன்சிலர்களிடம் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் கலவரம் போல கூட்டம் சத்தமாக காணப்பட்டது, அப்போது மேஜையிலிருந்த மைக்குகள் தள்ளிவிடப்பட்டதால் நகர்மன்ற கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நகர்மன்ற தலைவர் மணி அடித்து சமாதானம் செய்ய முயற்சித்தும் உறுப்பினர்களின் தொடர் வாக்குவாதத்தால், நகர மன்ற தலைவர் மன்ற கூட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்து கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறி தனது அறைக்கு சென்றார். மேலும் நகராட்சி கூட்டத்தில் இருதரப்பு இடையே வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது
Next Story