களியனுர் கிராமத்தில் கிராம சபை கூட்டம் ஒத்திவைப்பு

களியனுர் கிராமத்தில் போதிய துறை சார்ந்த அதிகாரிகள் வராததால் கிராம சபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், கிராமசபை கூட்டமானது நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆவத்தி பாளையம் பகுதியில் களியனூர் அக்ரஹாரம் ஊராட்சி மன்ற அலுவலகம் பின்பு கிராம சபை கூட்டமானது நடைபெற்றது. இந்த கூட்டத்தில் களியனூர் அக்ரகாரம் பகுதியை சேர்ந்த . கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களில் ஒரு சிலர் காவிரி ஆற்றில் தொடர்ந்து சாயக் கழிவுநீர் கலப்பது குறித்து பிரச்சனை இருந்து வருகிறது. சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் குறித்து வாட்ஸ் அப்பில் செய்தி வெளியிட்டால், அப்போதைக்கு ஒரு சில அதிகாரிகள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்..

ஆனால் வழக்கம் போல சாயப்பட்டறைகள் சட்டவிரோதமாக கழிவு நீரை காவிரி ஆற்றில் சாக்கடை நீரின் வழியே வெளியேற்றி வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீரை பருக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து புகார் தெரிவிக்கலாம் என்றால் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியத்துறைகள் சார்ந்த அதிகாரிகள் பெரும்பாலானோர் கூட்டத்திற்கு வராத நிலை உள்ளது.கிராம சபை கூட்டத்திற்கு 31 துறை சார்ந்த அதிகாரிகள் வரவேண்டும் என்ற விதி உள்ள நிலையில், ஒரு சில அதிகாரிகள் மட்டுமே கிராம சபை கூட்டத்திற்கு வருகின்றனர்.

இது சரி இல்லாத போக்கு என ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தொடர்ந்து ஒவ்வொரு முறையும் கிராம சபை கூட்டம் நடக்கும் போதெல்லாம் தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றம் செய்யப்படுகிறது. ஆனால் முறையான நடவடிக்கை எடுக்காத நிலை தொடர்கிறது. ஆவத்திபாளையம் பகுதியில் மக்கள் பிரச்சனைகள் சார்ந்த பல்வேறு விஷயங்கள் உள்ள நிலையில், தொடர்ந்து அதிகாரிகள் கிராம சபை கூட்டத்திற்கு வராமல் உள்ளனர். எனவே இந்த கிராம சபை கூட்டத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது.மேலும் கிராம சபை கூட்டத்திற்கு முறையான தகவல்கள் தெரிவிக்காததால் பொதுமக்களின் பெரும்பாலோர் பங்கேற்காத நிலை உள்ளது.

துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சிறப்பு கிராம சபை கூட்டத்தை மற்றொரு நாளில் நடத்த வேண்டும் என பொதுமக்கள் அதிகாரியிடம் கேட்டுக் கொண்டனர். இதனை அடுத்து அதிகாரிகள் வேறு வழி இன்றி கிராம சபை கூட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்தனர்.மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து முறையான தகவல் தெரிவிக்கப்பட்டு அதன் பிறகு மற்றொரு நாளில் விரைவில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் என வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார்.

Tags

Next Story