முடிச்சூர் வெளிவட்ட சாலை சந்திப்பில் பள்ளங்கள் - வாகன ஓட்டிகள் பீதி

முடிச்சூர் வெளிவட்ட சாலை சந்திப்பில் பள்ளங்கள் - வாகன ஓட்டிகள் பீதி
 தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதி

"முடிச்சூர், ஜி.எஸ்.டி., சாலைக்கு நிகரானது, தாம்பரம் - முடிச்சூர் சாலை. ஜி.எஸ்.டி.,- வாலாஜாபாத் சாலைகளை இணைப்பதால், 24 மணி நேரமும் போக்குவரத்து உள்ளது. முக்கியமான இச்சாலையில், வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை சந்திப்பில், முடிச்சூர் சீக்கனா ஏரி கலங்கல் வழியாக வெளியேறும் உபரி நீர், சாலையை கடந்து, அடையாறு ஆற்றுக்கு செல்லும் வகையில், மூடு கால்வாய் அமைக்கும் பணி, 2022ம் ஆண்டு பருவமழைக்கு முன் துவங்கப்பட்டது. படுமந்தமாக நடந்து வந்த இப்பணி, சமீபத்தில் முடிந்தது. இதையடுத்து, அப்பகுதியில் இருவழி போக்குவரத்து மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. ஆனால், மூடு கால்வாய் பணி காரணமாக, சில மீட்டர் துாரத்திற்கு சாலை சீர்குலைந்து, மரண பள்ளங்களாக உள்ளன. தினசரி, 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில், அங்கு கடும் நெரிசல் ஏற்படுகிறது. அதோடு, வாகன ஓட்டிகள் நாள்தோறும் விபத்தை சந்தித்து வருகின்றனர். துாசி பறப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளை சந்திக்கின்றனர். சாலையை சீரமைக்குமாறு, வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், நெடுஞ்சாலை துறை சார்பில் நடவடிக்கை இல்லை. உயிரிழப்புகள் ஏற்படும் முன் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story