ஒரு மாதம் ஆகியும் மூடப்படாத குழிகள் - வாகன ஓட்டிகள் அவதி !

ஒரு மாதம் ஆகியும் மூடப்படாத குழிகள் - வாகன ஓட்டிகள் அவதி !

 மூடப்படாத குழி

திருப்புவனத்தில் குடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளம் முறையாக மூடப்படாத நிலையில் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

திருப்புவனம் பகுதியில் உள்ள 18 வார்டுகளிலும் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க ஏதுவாக புதிதாக குழாய் பதிக்கும் பணி 16 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகிறது. திருப்புவனம் நகர்பகுதியில் 18 வார்டுகளிலும் பேவர் பிளாக், சிமென்ட், தார்ச்சாலைகள் பெயர்த்து எடுக்கப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. தெருக்கள் மட்டுமல்லாது மதுரை - ராமேஸ்வரம் மெயின் ரோட்டிலும் குழாய் பதிப்பதற்காக தார்சாலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

குழாய் பதிப்பதற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்று வரை எந்த பகுதியிலும் பள்ளங்கள் சரி செய்யப்படவே இல்லை. தெருக்களில் நடந்து செல்பவர்கள் பலரும் தடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். திருப்புவனம் மெயின் ரோடு ஏற்கனவே ஆக்கிரமிப்பால் சுருங்கியுள்ள நிலையில் குழாய் பதிப்பதற்காக ரோட்டையும் தோண்டியுள்ளதால் விலக கூட இடமில்லை.

தினசரி பள்ளங்களில் விழுந்து காயமடைந்து மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பள்ளங்களை சரி செய்ய வலியுறுத்தி பேரூராட்சியிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்த வித நடவடிக்கையும் இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story