பொத்தனூர் சுயம்பு வெள்ளக்கல் மாரியம்மன் கோயில் தேர் திருவிழா

பொத்தனூர் சுயம்பு வெள்ளக்கல் மாரியம்மன் கோயில் தேர் திருவிழா

தேர் திருவிழா 

நாமக்கல் மாவட்டம்,பொத்தனூர் சுயம்பு வெள்ளக்கல் மாரியம்மன் கோயில் தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர், சுயம்பு வெள்ளக்கல் மாரியம்மன் கோயில் திருத்தேர் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கிராம சாந்தி,கம்பம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதளுடன் திருவிழா தொடங்கியது. விழாவை தொடர்ந்து நேற்று புதன்கிழமை மாலை சப்பாரத்தில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும்,வியாழக்கிழமை காலை சிம்ம வாகனத்திலும், மாலை பூத வாகனத்திலும் அம்மன் திருவீதி உலா உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை காலை அன்னபட்சி வாகனத்திலும், மாலை யாணை வாகனத்திலும், 4-ஆம் தேதி மாலை அம்மன் பூந்தேரில் திருவீதி உலாவரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது, 5- ஆம் தேதி மாலை வடிசோறு நிகழ்ச்சியும், வெட்டும் குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

6- ஆம் தேதி நேற்று காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியை முன்னிட்டு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தக் குடங்களுடன் ஊர்வலமாக வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று காலை திருத்தேரில் அம்மன் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பொத்தனூர் சுயம்பு வெள்ளக்கல் மாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ஜனனி, செயல் அலுவலர் கிருஷ்ணராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story