கோழி கடையில் திருட்டு - இருவர் கைது

கோழி கடையில் திருட்டு -  இருவர் கைது
X

முகமது ஆஷிக்,ஜாகிர் உசேன்

திருவாரூர் அருகே கூத்தாநல்லூர் காவல் எல்லைக்கு உட்பட்ட ஜோவியா தெரு பெரிய பள்ளிவாசல் எதிரே உள்ள ஏ. ஆர். தீன் கோழி கடையில் ரூ.80 ஆயிரம் திருட்டு போய் விட்டதாக கடை உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார்.இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த முகமது ஆஷிக் ,மற்றும் ஜாகர் உசேன் ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது, இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். சிறப்பாக செயல்பட்ட கூத்தாநல்லூர் காவல் ஆய்வாளர்களுக்கு திருவாரூர் எஸ் பி ஜெயக்குமார் பாராட்டுகளை தெரிவித்தார்.



Tags

Next Story