கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்

கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்
 விருதுநகரில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நோய்களை தடுப்பதற்காக கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நாளை முதல் 14ம் தேதி வரை நடக்கிறது.
விருதுநகரில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நோய்களை தடுப்பதற்காக கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நாளை முதல் 14ம் தேதி வரை நடக்கிறது.

தமிழ்நாடு அரசு, கால்நடை பராமரிப்புத்துறை மூலம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு இலவசமாக காலத்திற்கு ஏற்றவாறு முகாம்கள் நடத்தி தடுப்பூசிப் பணியினை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் கோடைகாலத்திற்கு முன்னர் பிப்ரவரி மாத்தில் வெள்ளைக்கழிச்சல் தடுப்பூசி முகாம்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. நமது மாவட்டத்தில் தற்போது கோழிகளை தாக்கும் வெள்ளைக் கழிச்சல் நோய்க்கான தடுப்பூசி முகாம்களை 01.02.2024 முதல் 14.02.2024 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கோழிகள், பண்ணைக்கோழிகள், வாத்துகள் மற்றும் வான்கோழிகளை வைரஸ் கிருமியால் உண்டாக்கப்படும் வெள்ளைக் கழிச்சல் நோய் தாக்குகிறது. இந்நோயின் முக்கிய அறிகுறிகளாவது, கோழிகள் தீவனம் உண்ணாமை, சோர்ந்து போய் இருத்தல், வெள்ளைக் கழிச்சல், வெள்ளை நிறத்தில் வயிற்றுப்போக்கு ஏற்படுதல், நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு கோழிகள் நடக்க இயலாமல் போகும் ஆகியவை ஆகும். இந்நோய் ஏற்படின் கோழிப்பண்ணையாளர்களுக்கு அதிகளவில் பொருளாதார இழப்பு நேரிடும். மேலும் நோய் கண்ட கோழிகளை சிகிச்சை மேற்கொள்வது கடினமானது ஆகும். எனவே கோழிப்பண்ணையாளர்கள் எட்டு வார வயதிற்கு மேல் உள்ள கோழிகள் மற்றும் குஞ்சுகளுக்கு இத்தடுப்பூசியினை போட்டுக்கொள்ளலாம். வருடத்திற்கு இருமுறை தடுப்பூசி செலுத்தி வந்தால் இந்நோயினை முற்றிலும் அகற்றி விடலாம். விருதுநகர் மாவட்டத்திற்கு இப்பணிக்கென 1.68 இலட்சம் டோஸ் மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்திலுள்ள அனைத்து 115 கால்நடை மருத்துவ நிலையங்களிலும் மற்றும் துறை சார்பாக நடத்தப்படும் சிறப்பு முகாம்களிலும் தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட இருக்கிறது. தகுந்த முன்னறிவிப்போடு ஊராட்சி மன்றங்களின் ஒத்துழைப்போடு இந்த முகாமினை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இந்த சிறப்பு இலவச வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்களில் பங்கேற்று தங்கள் கோழிகளுக்கு தடுப்பூசியினை செலுத்தி பயன் அடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story