மின்வாரிய அலுவலகத்தை சீரமைக்க மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கை
மின்வாரிய அலுவலம்
மின்வாரிய அலுவலகத்தை சீரமைக்க மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கை
திருப்போரூரில், துணைமின் நிலைய கட்டடத்தில், உதவி பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் செயல்படுகிறது. இதில், பொறியாளர் அறை, மின் கட்டணம் மையம், அலுவலக அறைகள் உள்ளன. திருப்போரூர், தண்டலம், காலவாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 18,000 மின் இணைப்புகள், இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில், 40 ஆண்டுகளுக்கு முன் இக்கட்டடம் கட்டப்பட்டதால், பழுதடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. இக்கட்டடத்தின் உட்புற மேற்கூரை, ஆங்காங்கே பெயர்ந்து, பணி நேரத்தில் ஊழியர்கள் மீது விழுந்து, ஆபத்தை ஏற்படுத்துகின்றன. அதேபோல், மழைக்காலங்களில் கம்ப்யூட்டர், பிரின்டர் மற்றும் முக்கிய ஆவணங்கள் நனைந்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், அடிக்கடி கம்ப்யூட்டர் பழுதடைதலும், ஆவணங்கள் பாதுகாக்க முடியாமலும், போதிய இடவசதி இல்லாமலும் ஊழியர்கள் அவதிப்படுகின்றனர். எனவே, மின்வாரிய அலுவலகத்தை சீரமைக்க அல்லது புதிய கட்டட பணியை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மின்வாரிய ஊரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story