தாரமங்கலம், வீரபாண்டி பகுதிகளில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
மின் தடை
தாரமங்கலம், வீரபாண்டி பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில், தாரமங்கலம், காடம்பட்டி, சிக்கம்பட்டி, தொளசம்பட்டி, அமரகுந்தி, அத்திராம்பட்டி, பவளத்தானூர், அத்திக்காட்டானூர், பெரியாம்பட்டி, எம்.செட்டிப்பட்டி, துட்டம்பட்டி, பாப்பம்பாடி, சின்னப்பம்பட்டி, சமுத்திரம், பூக்கார வட்டம், கருக்குப்பட்டி, வெள்ளாளபுரம், வெள்ளக்கல்பட்டி, ஆட்டையாம்பட்டி, வேலநத்தம், மருளையம்பாளையம், பெத்தாம்பட்டி, ராஜாபாளையம், கூலிப்பட்டி, எட்டிமாணிக்கம்பட்டி, ராக்கிப்பட்டி, எஸ்.பாப்பாரப்பட்டி, சென்னகிரி, முத்தனம்பாளையம், ஏரிக்காடு, வீரபாண்டி, பாலம்பட்டி, கோணயநாயக்கனூர், அரசம்பாளையம், புதுப்பாளையம், வாணியம்பாடி, பைரோஜி, உத்தமசோழபுரம், அரியானூர், சீரகப்பாடி, சித்தனேரி ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவல்களை, சேலம் தெற்கு மின்வாரிய செயற்பொறியாளர் அன்பரசன், ஓமலூர் கோட்ட செயற்பொறியாளர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்புகளில் தெரிவித்து உள்ளனர்.
Next Story