மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்

மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்

மேட்டூர்  அனல் மின் நிலையம் 

மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் புதிய அனல் மின் நிலையம் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டது. மின் தேவை குறைந்ததை கருத்தில் கொண்டு இந்த அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி கடந்த 3 நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை முதல் இந்த அனல் மின் நிலையத்தில் மீண்டும் உற்பத்தி தொடங்கி உள்ளது.

இதேபோன்று தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகளுடன் செயல்பட்டு வரும் பழைய அனல் மின்நிலையத்தில் 4-வது யூனிட்டில் மட்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வந்தது. நேற்று காலை முதல் 2-வது யூனிட்டிலும் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது. இதன்மூலம் 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின்நிலையத்தில் தற்போது 420 மெகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்யப்படுகிறது.

Tags

Next Story