தேரோட்டத்தில் மின் கசிவு என்பது தவறான தகவல் - ஆட்சியர்

தேரோட்டத்தில் மின் கசிவு என்பது தவறான தகவல் - ஆட்சியர்

மின் கசிவு ஏற்பட்ட கடை 

தேரோட்டத்தின் போது மின் கசிவினால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டதாக பரவும் தவதிருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் தீபத்திருவிழா 7 ஆம் திருநாளான நேற்று பஞ்சமூர்த்திகள் மகாரதம் தேரோட்டம் நடைபெற்றது. காலை அருள்மிகு விநாயகர் ரதமும், அதனை தொடர்ந்து அருள்மிகு சுப்பரமணியர் ரதமும் இனிதே நிறைவுற்றது. இதனை தொடர்ந்து, மாலை 5 மணிக்கு அருள்மிகு அண்ணாமலையார் மகாரதம் தேரோட்டம் துவங்கியது. தேரோட்டம் துவங்கியவுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. எனினும், மகாரதம் நின்ற இடத்திலிருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் இருந்த ஒரு தனியார் நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த யூபிஎஸ் கருவியில் ஏற்பட்ட மின்கசிவினால் 2 பெண்களுக்கு லேசான மின்சார அதிர்ச்சி ஏற்பட்டது. திருத்தேருடன் வந்த மருத்துவ குழுவால் அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு இயல்பான நிலைக்கு திரும்பினர். திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பில் நலமுடன் உள்ளனர். இந்நிலையில், இந்நிகழ்வின் போது அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டதாக வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்கு மாறானதாகும். மேலும், ஒரு தனியார் கடையில் பயன்பாட்டில் இருந்த யூபிஎஸ் காரணமாக மட்டுமே இந்நிகழ்வு ஏற்பட்டது. எனவே, இந்நிகழ்வு தொடர்பான தவறான தகவல்களை பொருட்படுத்த வேண்டாம்.. அருள்மிகு அண்ணாமலையார் மகாரதம் தேரோட்டம் தடங்கல்கள் ஏதுமின்றி பெருந்திரளான பக்தர்களின் மகிழ்ச்சி பெருக்குடன் சிறப்பாக நடைபெற்றது என்பதையும் தெரிவித்துக் கொள்வதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், தெரிவித்துள்ளார். றான தகவல்களை பொருட்படுத்த வேண்டாம் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் தீபத்திருவிழா 7 ஆம் திருநாளான நேற்று பஞ்சமூர்த்திகள் மகாரதம் தேரோட்டம் நடைபெற்றது. காலை அருள்மிகு விநாயகர் ரதமும், அதனை தொடர்ந்து அருள்மிகு சுப்பரமணியர் ரதமும் இனிதே நிறைவுற்றது. இதனை தொடர்ந்து, மாலை 5 மணிக்கு அருள்மிகு அண்ணாமலையார் மகாரதம் தேரோட்டம் துவங்கியது.

தேரோட்டம் துவங்கியவுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. எனினும், மகாரதம் நின்ற இடத்திலிருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் இருந்த ஒரு தனியார் நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த யூபிஎஸ் கருவியில் ஏற்பட்ட மின்கசிவினால் 2 பெண்களுக்கு லேசான மின்சார அதிர்ச்சி ஏற்பட்டது. திருத்தேருடன் வந்த மருத்துவ குழுவால் அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு இயல்பான நிலைக்கு திரும்பினர். திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பில் நலமுடன் உள்ளனர். இந்நிலையில், இந்நிகழ்வின் போது அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டதாக வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்கு மாறானதாகும். மேலும், ஒரு தனியார் கடையில் பயன்பாட்டில் இருந்த யூபிஎஸ் காரணமாக மட்டுமே இந்நிகழ்வு ஏற்பட்டது. எனவே, இந்நிகழ்வு தொடர்பான தவறான தகவல்களை பொருட்படுத்த வேண்டாம்.. அருள்மிகு அண்ணாமலையார் மகாரதம் தேரோட்டம் தடங்கல்கள் ஏதுமின்றி பெருந்திரளான பக்தர்களின் மகிழ்ச்சி பெருக்குடன் சிறப்பாக நடைபெற்றது என்பதையும் தெரிவித்துக் கொள்வதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், தெரிவித்துள்ளார்.

Tags

Next Story