நெல்லையில் பஸ் மோதியதில் ஏற்பட்ட மின்தடங்கல்
மின்தடங்கல்
திருநெல்வேலி மாவட்டம், சமாதானபுரம் உப மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் வழங்கும் மின் கம்பத்தில் பேருந்து மோதியதை அடுத்து ஏற்பட்ட மின்தடங்கலை சரிசெய்த மின் ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
திருநெல்வேலி மாவட்டம் சமாதானபுரம் உப மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் வழங்கும் மின் கம்பத்தில் நேற்று (மே 21) பஸ் ஓன்று மோதியதில் மின்தடங்கள் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சேவியர் கல்லூரி பாளை பஸ் நிலையம் முதல் குலவணிகர்புரம் ரயில்வே கேட்டு வரை உள்ள பகுதிகளுக்கு மாற்று வழியில் மின்சாரம் வழங்கப்பட்டது. இந்த பணியை இரவில் துரிதமாக மேற்கொண்ட மின்வாரிய பணியாளர்களுக்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Next Story