காரிமங்கலம் துணைமின் நிலையத்தில் மின் நிறுத்தம் அறிவிப்பு

காரிமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வருகின்ற சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வருகின்ற சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறும் காரணத்தால் அதனை சுற்றியுள்ள பகுதிகளான காரிமங்கலம், கெரகோடஅள்ளி, பொம்மஅள்ளி, கெட்டூர், அனுமந்தபுரம், அண்ணாமலை அள்ளி, தும்பலஅள்ளி, கெண்டிகானஅள்ளி, எட்டியானூர், எலுமிச்சன அள்ளி, பெரியாம்பட்டி, கீரிக்கொட்டாய், சின்னபூலாப்பட்டி, பேகாரஅள்ளி, கொட்டு மாரனஅள்ளி, கோவிலூர், ஏ.சப்பானிப்பட்டி, கும்பாரஅள்ளி, கொல்லுப் பட்டி, காட்டூர், திண்டல், பந்தாரஅள்ளி, எச்சனஅள்ளி, கே.மோட்டூர், பெரியமிட்டஅள்ளி, கிட்டனஅள்ளி, மோட் டுகொட்டாய், கீழ்கொல்லப்பட்டி, மேல்கொல்லப்பட்டி, மன்னன்கொட்டாய், இருமத்தூர், கிருஷ்ணாபுரம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் அமலில் இருக்கும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story