மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிளை தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கண்ணையன், ராஜேந்திரன், சண்முகம், பாண்டுரங்கன், தண்டபாணி முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் புருஷோத்தமன், மண்டல செயலர் அன்பழகன், மாநில துணை தலைவர் அம்பிகாபதி ஆகியோர் கோரிக்கை விளக்கி பேசினர். மாநில துணை பொதுசெயலர் ராமநாதன் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு மின்துறை ஓய்வூதியர்களின் உரிமைகளை பாதுகாக்க உத்திரவாதம் அளிக்கும் ஷரத்துகளை, மின்துறை முத்தரப்பு ஒப்பந்தத்தில் இணைக்க வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர்.
Next Story