சீர்காழியில் விவசாய நிலத்தில் பவர் பிளான்ட்:அமைதிப் பேச்சுவார்த்தை

சீர்காழியில் விவசாய நிலத்தில் பவர் பிளான்ட்:அமைதிப் பேச்சுவார்த்தை

வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த நெப்பத்தூர் கிராமத்தில் மெகா கிரைடு மோட்டர்ஸ் என்ற பவர் பிளான்ட் அமைப்பதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த நெப்பத்தூர் கிராமத்தில் மெகா கிரைடு மோட்டர்ஸ் என்ற பவர் பிளான்ட் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பவர் பிளான்ட் தங்களது கிராமத்தில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால்,

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மற்றும் பவர் பிளான்ட் நிர்வாகிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது பொதுமக்கள் கூறுகையில் இந்த பவர் பிளான்ட் அமைய உள்ள இடம் முழுவதும் விவசாயம் நடைபெறக்கூடிய இடமாகவும் உள்ளது மேலும் பவர் பிளான் அமைப்பது தொடர்பாக கிராமத்திலும் மற்ற எந்த துறையிலும் அனுமதி பெறவில்லை. மேலும் இந்த பகுதியை ஆய்வு செய்த பிறகு அனுமதி வழங்க வேண்டும் எனவும் பவர் பிளான் அனுமதி வழங்கும் பட்சத்தில் இது தொடர்பான நன்மை தீமைகளை கிராம பொதுமக்களின் துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கி கூற வேண்டும் என கிராம மக்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டது. பவர் பிளான் அமைப்பது தொடர்பாக அனுமதி பெற வேண்டிய அனைத்து துறைகளிடம் இருந்தும் அனுமதி பெற்று கிராம ஊராட்சியில் அனுமதி பெற்று தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவடைந்த பின்பு சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ன வட்டாட்சியர் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேச்சுவார்த்தையின் போது திருவெண்காடு சீர்காழி காவல் ஆய்வாளர்கள் வருவாய்த்துறை அதிகாரிகள் கிராம மக்கள் மற்றும் பவர் பிளான்ட் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story