சூறாவளி காற்றால் மின்கம்பங்கள் சேதம்

குமாரபாளையம் அருகே பலத்த சூறாவளி காற்று வீசியதால், நான்கு மின் கம்பங்கள் சேதமடைந்தன.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பலத்த சூறாவளி காற்றால் உடைந்த 4 மின் கம்பங்கள் உடைந்ததாலும், பல மரங்கள் மின் ஒயரில் சாய்ந்ததாலும் ௭ மணி நேரத்திற்கும் மேலாக மின் நிறுத்தம் செய்யப்பட்டது.

குமாரபாளையத்தில் நேற்று மாலை 03:00 மணியளவில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் வேமன்காட்டுவலசு, சத்யா நகர், ஒட்டன்கோவில் உள்ளிட்ட இடங்களில் 4 மின் கம்பங்கள் உடைந்ததாலும், கோட்டைமேடு மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல இடங்களில், உயர் அழுத்த மின் கம்பிகளின் மீது மரங்கள் விழுந்ததில் சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இரவு 10:00 மணிக்கு மேலாகியும் மின் இணைப்பு கொடுக்கப்படாததால் சத்யா நகர், ஜெய்ஹிந்த் நகர், தட்டான்குட்டை, வேமன்காட்டுவலசு, சூரியகிரி மலை, ஒட்டன்கோவில், கல்லங்காட்டுவலசு உள்ளிட்ட பல பகுதிகளில் பொதுமக்கள் பெரும் அவஸ்தைக்கு ஆளாகினர். ஆனங்கூர் சாலை, பள்ளிபாளையம் சாலைகளில் பல இடங்களில் பல தென்னை மரங்கள் உள்ளிட்ட பல மரங்கள் சாய்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரவு நேரம் என்பதால் சரி வர சேத மதயு தெரியாத நிலையில் உள்ளது. 7 இடங்களில் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டதாக மின் வாரிய அதிகாரிகள் கூறினர்.

Tags

Next Story