ராசிபுரத்தில் மின் சிக்கன வாரவிழா விழிப்புணர்வு பேரணி
ராசிபுரத்தில் மின் சிக்கன வாரவிழா விழிப்புணர்வு பேரணி
ராசிபுரத்தில் மின் சிக்கன வாரவிழா விழிப்புணர்வு பேரணி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கோட்ட மின்வாரியம் சார்பில் மின்சிக்கன வாரவிழா விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை ராசிபுரம் நகரில் நடைபெற்றது. ஆண்டுதோறும் டிச.14 முதல் டிச.1 வரை மின்சிக்கன வாரவிழா மின்துறை சார்பில் கடைபிடிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து மினசாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து ராசிபுரம் எஸ்ஆர்வி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பாக துவங்கிய விழிப்புணர்வு பேரணியில் ராசிபுரம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ஆ.சபாநாயகம் தலைமை வகித்தார். பள்ளி மாணவ மாணவியர், மின்வாரிய ஊழிர்கள் பங்கேற்ற இ்பபேரணியில் ராசிபுரம் நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் பங்கேற்றார். ராசிபுரம் பழைய பஸ் நிலையம், கவரைத்தெரு, கடைவீதி, கச்சேரி வீதி வழியாக மீண்டும் பள்ளியை அடைந்த இப்பேரணியில் பங்கேற்ற பள்ளி மாணவ மாணவியர்கள், மின்வாரிய ஊழியர்கள் மின்சிக்கனத்தை வலியுறுத்தும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான பதாகைகள் ஏந்தியவாறு பங்கேற்றனர். வீடுகளில் மின் சிக்கனத்தை கடைபிடிக்க பின்பற்றப்பட வேண்டிய முறைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. பேரணியில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் ஏ.ரவி, எம்.வெங்கடாசலம், என்.மோகன்ராஜு, பி.ஆனந்தன் உள்ளிட்ட உதவி பொறியாளர்கள், மின்வாரிய அலுவலர்கள் பலரும் பங்கேற்றனர்.
Next Story