நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக மின்சாரம் திருட்டு

நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக மின்சாரம் திருட்டு
மின் திருட்டு 
கெங்கவல்லி அருகே நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக ஒப்பந்ததாரர் மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் திருடியதாக எழுந்த புகாரின் பேரில் மின் வாரிய அதிகாரிகள் மின்சார ஒயர்களை பறிமுதல் செய்தனர்.

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி -தெடாவூர் நெடுஞ் சாலையில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு இடைநிலை பாதையை மாற்றி, இருவழிப்பாதையாக மாற்றுவதற்கு ஒருங்கிணைந்த நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி மதிப்பீட்டில் சாலை பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சாலை பணியை தனியார் ஒப்பந்ததாரர் எடுத்துள்ளார். இந்நிலையில் ஆணையாம்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளி முன்பு கேட்டின் அருகில் மின்கம்பத்தில் நெடுஞ்சாலை ஒப்பந்த தாரர் திருட்டுத்தனமாக, கொக்கி போட்டு மின்சாரம் எடுத்து பயன்படுத்தி வந்துள்ளார்.

இது சம்மந்தமாக அப் பகுதியைச் சேர்ந்தபொது மக்கள், தெடாவூர் மின்வாரியத்தில் புகாரளித்தனர். அதன் பேரில், தெடாவூர் துணைமின் நிலையஉதவி செயற்பொறியாளர் ஆனந்தன், சம்பவ இடத் தில் நேரில் ஆய்வு செய்து உடனடியாக மின் கம்பத்திலிருந்து மின் வயரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார். பள்ளி முன்பு மாணவர்கள் செல்லும் பாதையில் அச்சுறுத்தும் வகையில், மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் திருடப்பட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story