விசைத்தறி தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டம் ரத்து

விசைத்தறி தொழிலாளர்கள்  சாலை மறியல் போராட்டம் ரத்து
விசைத்தறி தொழிலாளர்கள் காலை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் ரத்து
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கேட்டு கடந்த சில நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கூலி உயர்வு கேட்டு இன்று காலையில் 11 மணி அளவில் ஆண்களும் பெண்களும் குடும்பத்துடன் கலந்து கொள்ளும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று சிஐடியு தொழிற்சங்கம் அறிவித்திருந்தது.

இதனை முன்னிட்டு நேற்று இரவு 11 மணி வரை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இன்று காலை நடைபெறுவதாக இருந்த சாலை மறியல் போராட்டம் ரத்து செய்யப்பட்டது. இது சம்பந்தமான விளக்கக் கூட்டம் லஷ்மியாபுரம் 4 ம் தெருவில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு சி ஏ டி யு விசைத்தறி சம்மேளன பொதுச்செயலாளர் சந்திரன் தலைமை வகித்தார் தென்காசி மாவட்ட தலைவர் மாரியப்பன், மாவட்ட செயலாளர் மணிகண்டன் வட்டார செயலாளர் அசோக்ராஜ் மாவட்ட பொருளாளர் மாணிக்கம் விசைத்தறி மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் விளக்கினர். இதில் ஏராளமான விசைத்தறி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story