எந்திரம் மூலம் கரும்பு நடவு குறித்த செயல்விளக்க பயிற்சி
இயந்திரம் மூலம் கரும்பு நடவு குறித்த செயல் விளக்க பயிற்சி
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே வேங்கூர் கிராமத்தில் உள்ள பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை மற்றும் கோயம்புத்தூர் கரும்பு இனப் பெருக்க நிறுவனம் சார்பில் கண்டாச்சிபுரம் அருகே சென்னகுணம் கிராமத்தில் எந்திரம் மூலம் கரும்பு நடவு குறித்த செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது. இதில் ஒரே இடத்தில் கூட்டுப்பண்ணையின் மூலம் 4 விவசாயிகள் ஒருங்கிணைந்து கரும்பு நடவு செய்து பயனடைந்தனர். நிகழ்ச்சியில் முகையூர் வட்டாரத்திற்கு உட்பட்ட 100- க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
இதில் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலையின் உதவி பொது மேலாளர் (கரும்பு அபிவிருத்தி) டாக்டர் எஸ்.மோகன், மேலாளர் (கரும்பு) ஆர். ஸ்ரீ நிரபல்நாத் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். கோயம்புத்தூர் கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தின் விஞ்ஞானி டாக்டர் ஆறுமுகநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு எந்திரத்தின் மூலம் கரும்பு நடவு மேலாண்மை மற்றும் இதன் மூலம் கரும்பு நடவு செலவினங்களை குறைப்பதற்கான தொழில் நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.
கரும்பு நடவு, சோகை உரித்தல் மற்றும் கரும்பு அறுவடைக்கு தேவையான சிறு எந்திரங்கள் வழங்கப்பட்டால் எங்களுக்கு அதிக அளவில் லாபம் கிடைக்கும் என அதிகாரிகளிடம் விவசாயிகள் தெரிவித்தனர்.