பூஞ்சை நோயை கட்டுப்படுத்தும் முறை குறித்து செயல் விளக்கம்
பைல் படம்
கொசவப்பட்டியில் தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் குழுவினர் மா பயிரில் கரும்பூஞ்சை நோயை கட்டுப்படுத்தும் முறை குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.
கொசவப்பட்டியில் தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் குழுவினர் மா பயிரில் கரும் பூஞ்சை நோயை கட்டுப்படுத்தும் முறை குறித்து செயல் விளக்கம் அளித்தனர். இதில் ஸ்டார்ச் கரைசல், 1 கிலோ மைதா/ ஸ்டார்ச் ஐ 5 லி தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து, 20 லி. தயார் செய்து மாமரங்களில் தெளித்து காண்பித்தனர். தற்போது நிலவும் தட்ப வெப்பத்தால் மா மரத்தை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களை பற்றி காட்சிப்படுத்தினர்.
Next Story