கல்வெட்டு வாசிப்பு பயிற்சி

கும்பகோணம் அரசினர்‌ மகளிர் கல்லூரியின் (தன்னாட்சி) வரலாற்றுத்துறை சார்பில் கல்வெட்டு வாசிப்பு பயிற்சி நடைபெற்றது.
நேற்றைய நாள் நமது சங்கத்தின் வரலாற்று பயணத்தில் இரண்டாவது மைல்கல் எனலாம்... காரணம் கடந்த வருடம்‌ (03.03.2023) சங்கத்தின் இரண்டாமாண்டு துவக்க விழாவினை கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் (தன்னாட்சி) தேசிய‌ கருத்தரங்கமாக நடத்தி அதில்‌ நம்முடைய சங்கம் சார்பாக முதல் ஆய்வு புத்தகம்‌ (திருநல்ல கூரூர்) வெளியிட்டோம்... இவ்வருடம் மூன்றாம் ஆண்டு‌ துவங்கும் வேளையில் கும்பகோணம் அரசினர்‌ மகளிர் கல்லூரியின் (தன்னாட்சி) வரலாற்றுத்துறை சார்பில்
கல்வெட்டு வாசிப்பு பயிற்சி
(07.03.2024) என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது... இதில் மாணவிகளுக்கு‌ கல்வெட்டு‌ படியெடுத்து வாசிப்பது எப்படி என்பதை கும்பகோணத்தின் நாகேஸ்வரன் கோவிலுக்கு நேரடியாக அழைத்து சென்று விளக்கத்துடன் பயிற்சி வழங்கியும் பின்பு கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தொல்லியல் சார்ந்த படிப்புகள் & வேலை வாய்ப்புகள் குறித்தும் காணொளி வாயிலாக விளக்கம்‌ அளிக்கப்பட்டது... இன்றைய நாளில் முத்தாய்ப்பாக அமைந்த நிகழ்வு யாதெனில் "நமது கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கமும், கும்பகோணம் அரசினர் மகளிர் கல்லூரியும்
புரிந்துணர்வு ஒப்பந்தம்
கையெழுத்திட்டது... இந்த ஒப்பந்தம் மூலம், கல்லூரி மாணவிகளுக்கு கல்வெட்டியல், கோவில் கட்டடக்கலை, சிற்பக்கலை சார்ந்த‌ பயிற்சி பட்டறைகள், கண்காட்சிகள், தொல்லியல் சார்ந்த இடங்களுக்கு களப்பயணம், தேசிய கருத்தரங்கு நிகழ்வுகள், மரபு சின்னங்களை பாதுகாப்பது எப்படி?, தங்கள் ஊர் பொதுமக்களிடம் இதன் சிறப்பு குறித்து விழிப்புணர்வு உண்டாக்குவது எப்படி? போன்றவற்றை நோக்கமாக கொண்டு செயல்படுவது என இரண்டு நிறுவனங்களும் இணைந்து முடிவு செய்துள்ளனர்... இனிவரும் காலங்களில் நமது சங்கத்தின் பொறுப்பானது இதன் மூலம் மேலும் அதிகரித்துள்ளது... நமது சங்கம் எவ்வாறு கட்டமைக்கப்பட வேண்டும், எவ்வாறு செயல்பட வேண்டும் என நான் கண்ட கனவு இன்று மெய்யாகி உள்ளது. நாம் நமது இலக்கினை நோக்கி சரியான பாதையில் சென்று கொண்டுள்ளோம்... இது ஒரு‌ நல்ல ஆரம்பம், இந்த நிகழ்வில் எனக்கு துணை நின்று ஒத்துழைப்பு நல்கிய சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் சங்கத்தின் நிறுவனர் என்ற முறையில் இருகரம் கூப்பி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்... இனிவரும் நிகழ்வுகளில் நமது சங்கத்தில் உள்ள துறை சார்ந்த திறமையானவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என முடிவு செய்துள்ளோம்...

Tags

Next Story