காளான் வளர்ப்பு செயல்முறை பயிற்சி

காளான் வளர்ப்பு செயல்முறை பயிற்சி

காளான் வளர்ப்பு செயல்முறை பயிற்சி

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த ஆனைமங்கலம் ஊராட்சியில் காளான் வளர்ப்பு செயல்முறை பயிற்சி நடைபெற்றது
நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த ஆனைமங்கலம் ஊராட்சியில் காளான் வளர்ப்பு செயல்முறை பயிற்சி நடைபெற்றது. பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிலையம் மாணவர்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஆனைமங்கலம் கிராம விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு மற்றும் கால்நடைகளில் வரும் நோய்களை எதிர்ப்பதற்கான இயற்கை வழிமுறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் காளான் எளிய முறையில் வளர்ப்பது குறித்தும் பயன்கள் குறித்தும்‌ விளக்கினர். நிகழ்ச்சியில் ஆனைமங்கலம் கிராம விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கெடுத்து பெரும் ஆதரவு அளித்தனர்.

Tags

Next Story