பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மாவட்ட ஆட்சியர் 

நாகப்பட்டினம் மாட்டத்தில் தன்னலமற்ற துணிச்சலான செயல்களில் ஈடுபட்ட இளம் குழந்தைகளுக்கு பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதுக்கு ஜூலை 31க்குள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் மாட்டத்தில் தன்னலமற்ற துணிச்சலான செயல்களில் ஈடுபட்ட இளம் குழந்தைகளுக்கு பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதுக்கு 31.07.2024க்குள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் .ஜானி டாம் வர்கீஸ், தகவல் இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் வாயிலாக பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்கப்படுகின்றது.

இவ்விருது தன்னலமற்ற துணிச்சலான செயல்களில் ஈடுபட்ட திறமையான குழந்தைகளின் திறமைகளை பாராட்டி அங்கீகாரம் அளிப்பதனை நோக்கமாக கொண்டு பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும் விளையாட்டு, சமூக சேவை, அறிவியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சமூகத்தில் பரவலான மற்றும் வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்திய குழந்தைகளுக்கு அளிக்கப்படுகின்றது. மேலும் இந்த விருதினை பெறுவதற்கு இந்திய குடிமகனாக மற்றும் இந்தியாவில் வசிக்கும் 5 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.

. இவ்விருதுக்கான விண்ணப்பத்தினை குழந்தையோ அல்லது குழந்தையை சார்ந்த பெற்றோர் ஆசிரியர் மற்றும் அலுவலர்கள் பரிந்துரைக்கலாம், 2024ஆம் ஆண்டு இவ்விருதுக்கான விண்ணப்பத்தினை 31.07.2024க்குள் பதிவு செய்தல் வேண்டும்.

Tags

Read MoreRead Less
Next Story