சித்தலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

தர்மபுரி சித்தலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

நேற்று பிரதோஷ தினத்தை முன்னிட்டு தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட எஸ்வி ரோடு பூபதி திருமண மண்டபம் பின்புறம் மிகவும் பழமை வாய்ந்த மற்றும் பிரசித்தி பெற்ற சித்த லிங்கேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது இங்கு தினந்தோறும் சுவாமிக்கு மூன்று கால பூஜைகள் நடைபெறுவது வழக்கம் என்ன நிலையில் நேற்று பிரதோஷ தினத்தை முன்னிட்டு மாலை 6 மணி அளவில் சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள லிங்கேஸ்வரருக்கு வில்வ இலைகளால் பூஜை செய்து பால் தயிர் பஞ்சாமிர்தம் நெய் இளநீர் மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது

இதனை தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்ற நிலையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி குழுவினர் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story