பரமத்தி வேலூர் சுற்றுவட்டார சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

 பரமத்தி வேலூர் சுற்றுவட்டார சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

சிறப்பு அலங்காரத்தில் சுவாமி 

பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் திங்கட்கிழமை சோமாவர வளர்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பரமத்தி வேலூர் சுற்றுவட்டார சிவன் கோயில்கலான பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர்,கோப்பணம்பாளையம் ஸ்ரீ பரமேஸ்வரர்,வேலூர் பேட்டை அரசமரத்து சிவன்,நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர்,மாவுரெட்டி பீமேஸ்வரர்,பில்லூர் வீரட்டீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோயில்களில் திங்கட்கிழமை சோமாவர சிறப்பு பூஜை நடைபெற்றது.

முன்னதான சிவன் கோயிலில் உள்ள நந்திக்கு பால்,பன்னீர்,சந்தனம்,மஞ்சள்,திருமஞ்சள் மற்றும் திருநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்றது.

பின்பு நந்தி மற்றும் சிவனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story