உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
பிரதோஷ வழிபாடு
சேலம் உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உத்தமசோழபுரத்தில் உள்ள கரபுரநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. முன்னதாக பெரியநாயகி சமேத கரபுரநாதர் சாமிக்கு பால், இளநீர், தயிர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட 16 வகையான திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சாமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் உத்தமசோழபுரம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story