தஞ்சாவூரில் பிரகன் நாட்டியாஞ்சலி விழா தொடக்கம்

தஞ்சாவூரில் பிரகன் நாட்டியாஞ்சலி விழா தொடக்கம்

நாட்டியாஞ்சலி 

தஞ்சாவூரில் பிரகன் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தொடங்கியது.
மகா சிவராத்திரி விழாவையொட்டி தஞ்சாவூர் பெரியகோயிலை ஒட்டியுள்ள பெத்தண்ணன் கலையரங்கத்தில் பிரகன் நாட்டியாஞ்சலி விழா சனிக்கிழமை மாலை தொடங்கியது. பிரகன் நாட்டியாஞ்சலி பவுண்டேஷன் தஞ்சாவூர் மாநகராட்சி, தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் நடைபெறும் இவ்விழா மார்ச் 14 ஆம் தேதி வரை தொடர்கிறது. நாள்தோறும் மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இவ்விழா இரவு 9 மணி வரை நடைபெறும். இதில், பரதநாட்டியம், மோகினியாட்டம், கதக், ஒடிசி, குச்சிப்புடி ஆகிய நடன நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இலங்கை, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்தும், குஜராத், மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், மைசூரு, சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களிலிருந்தும், தஞ்சாவூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு நாட்டியப் பள்ளிகளிலிருந்து நடனக் கலைஞர்கள் பங்கேற்று நடனமாடுகின்றனர்.

Tags

Next Story