தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிரச்சாரம்

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிரச்சாரம்

பிரச்சாரம்

காரைக்குடி நத்தம் வழித்தடத்தில் புதிய ரயில் பாதை திட்டம் அமைத்து தரப்படும் என பிரச்சாரத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் தெரிவித்தார்.

திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளர் முகமது முபாரக் கை ஆதரித்து தேசிய முற்போக்கு திராவிடர் கழக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திண்டுக்கல் நாகல் நகர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் பிரேமலதா பேசியதாவது ,திண்டுக்கல் என்றால் பூட்டு தொழில் நலிவடைந்துள்ளது. அந்தத் தொழிலை பாதுகாப்போம். சிறுமலை சுற்றுலாத்தலமாக மாற்றப்படும் பேருந்து நிலையம் புறநகர் பகுதியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் நிச்சயமாக உருவாக்கிக் கொடுப்போம்.

கொடைக்கானலில் வாகன நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்குடி நத்தம் வழித்தடத்தில் புதிய ரயில் பாதை திட்டம் அமைத்து தரப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Tags

Next Story