சித்திரை திருவிழா - முகூர்த்த கால் நடும்நிகழ்வு !
திருவிழா
தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் சித்திரை திருவிழா முன்னிட்டு முகூர்த்த கால் நடும் நிகழ்வு நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழாவை முன்னிட்டு தல்லாகுளம் பிரசன்னம் வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது மதுரை மாவட்டத்தில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் புகழ் பெற்றது சித்திரை திருவிழா. அந்த சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணம் தேரோட்டம் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருதல் என்று சிறப்பமிக்க நிகழ்ச்சிகள் அடங்கும். அந்த வகையில் அழகர் கோவில் கள்ளழகர் சித்திரை திருவிழாவை முன்னிட்டு உப கோயிலான தல்லாகுளம் பகுதியில் உள்ள பிரசன்னா வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. அழகர் கோவில் துணை ஆணையர் கிருஷ்ணன் தலைமையில் கோவில் பட்டார்கள் சிறப்பு பூஜைகள் செய்து முகூர்த்தகால் ஊன்றினர். இந்நிகழ்வில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் உறுப்பினர்கள் கோவில் அதிகாரிகள் அலுவலர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
Next Story