அமாவாசையை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவி மிளகாய் யாகம்

அமாவாசையை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவி மிளகாய் யாகம்
மிளகாய் யாகம் 
சாணார்பட்டி அருகே ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவி மிளகாய் யாகம் நடைபெற்றது.
சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான்பாறை ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் சித்திரை அமாவாசையான நேற்று நடந்த பிரத்தியங்கிரா தேவி மிளகாய் யாகத்தை சபையின் நிர்வாகி திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் செய்து வைத்தார். இதையொட்டி நேற்று காலை முதல் சபையில் வளர்க்கப்படும் 50 க்கு மேற்பட்ட பல்வேறு வகை நாட்டு மாடுகளுக்கு பக்தர்கள் அகத்திக்கீரை, உணவுகள் வழங்க கோ பூஜை நடைபெற்றது.

Tags

Read MoreRead Less
Next Story