அங்கன்வாடி பணியாளர்களுக்கு கர்ப்ப கால விழிப்புணர்வு

அங்கன்வாடி பணியாளர்களுக்கு கர்ப்ப கால பராமரிப்பு, பச்சிளம் குழந்தை பராமரிப்பு, மன ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மற்றும் தாய்ப்பால் முக்கியத்துவம் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அறிவுரையின்படி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், சிவகாசி சுகாதாரப் பகுதியில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு கர்ப்ப கால பராமரிப்பு, பச்சிளம் குழந்தை பராமரிப்பு, மன ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மற்றும் தாய்ப்பால் முக்கியத்துவம் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இப்பயிற்சி வகுப்பு முதற்கட்டமாக விருதுநகர் சுகாதாரப் பகுதி மாவட்டத்தைச் சார்ந்த 600 அங்கன்வாடி பணியாளருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று சிவகாசி சுகாதாரப் பகுதி மாவட்டத்தை சார்ந்த 660 அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் குழந்தைகள் நலன் மனநலம் மற்றும் மகப்பேறு மற்றும் பெண்கள் நலன் துறையைச் சார்ந்த மருத்துவரால் பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சி வகுப்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள், பணியாளர்கள், பயிற்சி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story