கர்ப்பிணி பெண்  தீ குளிப்பு - காப்பாற்ற சென்ற கணவர் காயம்

கர்ப்பிணி பெண்  தீ குளிப்பு - காப்பாற்ற சென்ற கணவர் காயம்

 பெண்  தீ குளிப்பு

கீரிப்பாறையில் கர்ப்பிணி பெண்  தீ குளித்ததை காப்பாற்ற சென்ற கணவர் காயம்.
குமரி மாவட்டம் கீரிப்பாறை லேபர் காலனி பகுதியை சேர்ந்தவர் அபிஜித் (33). இவருக்கும் ரஞ்சிதா (25) என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ரஞ்சிதா தற்போது 9 - மாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு வளைகாப்பு முடிந்து பிரசவத்திற்க்காக பரளியாறு பகுதியில் உள்ள அவரது தாயார் வீட்டில் இருந்து வருகிறார். மனைவியை பார்ப்பதற்க்காக அவரது கணவர் அபிஜித் சென்ற போது மது குடித்து சென்றதாகவும் அதனால் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்ப்பட்டதாகவும் தெரிகிறது. இதனால் ரஞ்சிதா தீக்குளிக்க முயன்றுள்ளார். மனைவியை காப்பாற்ற சென்ற கணவருக்கும் தீ காயம் ஏற்ப்பட்டு இருவரும் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கீரிப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags

Next Story