தேனி : வாக்குபதிவு குறித்தான முதற்கட்ட பயிற்சி

தேனி : வாக்குபதிவு குறித்தான முதற்கட்ட பயிற்சி

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 

தேனியில் முதற்கட்டமாக நடைபெறும் பயிற்சி வகுப்பில் வாக்குப் பதிவு பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் எனமாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 முன்னிட்டு, 33-தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 198.ஆண்டிபட்டி, 199.பெரியகுளம், 200.போடிநாயக்கனுார், 201.கம்பம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் மற்றும் தேனி வட்டத்துக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி எதிர்வரும் 24.03.2024 அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 05.00 வரை நடைபெறவுள்ளது.

ஆண்டிபட்டி சட்டமன்ற பகுதிக்கு வேளாங்கன்னி மாதா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியிலும், போடிநாயக்கனுார் சட்டமன்ற பகுதிக்கு Z.K.M. மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியிலும், பெரியகுளம் சட்டமன்ற பகுதிக்கு தேனி, மேரிமாதா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியிலும், கம்பம் சட்டமன்ற பகுதிக்கு உத்தமபாளையம் H.K.R.H. கல்லுாரியிலும் மற்றும் தேனி வட்டத்திற்கு வீரபாண்டியில் உள்ள தேனி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியிலும் (சௌராஷ்ட்டிரா கல்லுாரி) பயிற்சி நடைபெறவுள்ளது என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story