விஜய பிரபாகரனை ஆதரித்து பந்தல்குடியில் பிரேமலதா பிரச்சாரம்
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பந்தல்குடியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்* அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், உங்களுக்காக விஜய பிரபாகர் குரல் டெல்லியில் ஒலித்து இந்த தொகுதிக்கு மக்களுக்கும் செய்ய வேண்டிய நல்ல விஷயங்களை செய்ய உங்களுக்கு உறுதுணையாக இருந்து நமது மக்களுக்காக உழைக்க அவருக்கு நீங்கள் ஒரு வாய்ப்பை தர வேண்டும்.
விஜய பிரபாகர் இந்த தொகுதியை எல்லாவிதத்திலும் முன்னேற்றுவார் என்பதை உறுதியாக கூறுகிறேன். புரட்சிக் கலைஞருக்கு ஒரு வாய்ப்பை தராமல் விட்டோமே என ஏங்கும் மக்களுக்கு விஜய பிரபாகரை கேப்டனாக நினைத்து கேப்டனின் மறு உருவமாக எண்ணி அவருக்கு நீங்கள் வாய்ப்பை கொடுக்க வேண்டும் அனைத்து மக்களுக்கும் இந்த தொகுதி முழுக்க அனைத்து பணிகளையும் செய்வார். இந்த பந்தல்குடியில் விவசாயத்தை அழிக்கும் காட்டுப்பன்றிகளை ஒழிக்க அதை வனவிலங்குகள் பட்டியிலிருந்து நீக்க விஜய பிரபாகர்கள் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார்.
அதற்கான பாதுகாப்பை உங்களுக்கு நாங்கள் ஏற்படுத்துவோம் இப்ப பகுதியிலே அதிகமாக விளையும் மல்லிகை பூக்கள் விலை குறைவால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க சென்ட் பேக்டரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவசமாக இன்ஷூரன்ஸ் மற்றும் மருத்துவ காப்பீடு மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் விரிவாக்க பகுதிகளில் சாலை வசதி மற்றும் மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்படும் என்கின்ற வாக்குறுதிகளை இந்த நேரத்தில் இந்த நிச்சயமாக இந்த பகுதிக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் நாங்கள் செய்வோம் மகளிருக்கு இலவச தொழில் பயிற்சி நாங்கள் நிச்சயமாக அளிக்க இருக்கிறோம் கிராம இளைஞர்கள் விவசாயத் தொழில் மேம்பட கைத்தொழில் தொழில் குழுமத்தில் காமன் ஸ்பெஷலிட்டி சென்டர் உறுதியாக நாம கொண்டு வருவோம்.
அருப்புக்கோட்டை நகராட்சி சாலைகள் மேம்படுத்த வேண்டும் அது மட்டும் இல்லாம விருதுநகர் மதுரை வரை ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் குடிதண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக இருக்கு உறுதியாக எங்க சொந்த செலவில் லாரிகளை அமைத்து எல்லா இடத்திற்கும் குடிதண்ணீர் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்வோம். எனவே நீங்கள் அனைவரும் விஜய பிரபாகர் அவர்களுக்கே கேப்டன் கண்டெடுத்த வெற்றி சின்னமாம் முரசு சின்னத்திலே நான்காவது நம்பர் பட்டனுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.
உறுதியாக வெற்றி பெற செய்தவுடனே நிச்சயமாக இங்கு இருக்கின்ற பெண்களுக்கு அதுவும் தாய் குலங்களுக்கு தையல் பயிற்சி மற்றும் கணினி பயிற்சி அதுமட்டுமில்லாமல் உறுதுணையாக உங்களுக்கு இருந்து நீட் பயிற்சி மையங்களை நாங்கள் கொண்டு வரப் போகிறோம் நாங்களே பயிற்சி கொடுத்து நாங்கள் தையல் மெஷின் வாங்கி கொடுத்து உங்கள் வாழ்க்கையில் நிச்சயமாக ஒளி ஏற்றுவோம். அது மட்டும் இல்லை பெண்கள் நாட்டின் கண்கள் என்கின்ற திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 6 லட்சம் ரூபாய் இந்த விருதுநகர் தொகுதி மக்களுக்கு வழங்கப்படும். ஐந்து வருடத்தில் 30 லட்சம் ரூபாய்க்கு நீங்கள் விருதுநகர் தொகுதியில் இருக்கின்ற பெண்களுக்கு ஊக்கத்தொகையாக தரப்பட்டு உங்கள் வாழ்வில் ஒளி ஏற்றப்படும் அது ஆண்கள் 25 கேப்டன் பிறந்தநாள் அன்னைக்கு இந்த தொகுதியில் ஒரு விழாவாக எடுத்து அந்த நிதி உங்களை வந்து சேரும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாளாக மாற்றி ஒரு நாளைக்கு 500 ரூபாய் உங்களுக்கு கூலி கிடைக்க நிச்சயமாக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து நிச்சயமாக அந்த திட்டத்தை கொண்டு வருவார் இன்னைக்கு அவரை எதிர்த்து போட்டியிடுபவர் யார் என்பது உங்களுக்கு தெரியும் பத்து வருஷமா எம்பி ஆக இங்கு இருந்து ஒரு வாட்டியாவது தொகுதி பக்கம் வந்தாரா கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா ஆனா பத்து வருஷம் சரியாக செய்யாதத இனிமேல் என்ன செய்யப் போற அப்படின்றத நீங்க யோசிக்கங்க நீங்க முடிவு பண்ணுங்க.
கேப்டன் பிள்ளை எப்படி அப்படிங்கறத உங்களுக்கு தெரியும் உங்களோட ஒண்ணா இருந்து தாயா புள்ளையா பழகி ஒரு பிள்ளையா உங்க கூட இருந்தே உங்க கஷ்டம் என்னென்றத தெரிஞ்சு அதை வந்து சரி செய்யக்கூடிய ஒருத்தர் தான் விஜய பிரபாகரன். மாணிக்கம் தாகூர் பத்து வருஷமா இருந்தார் என்ன பண்ணாரு எதுக்கு இன்னைக்கு வராரு தெரியுமா விஜய பிரபாகர் உங்களுக்கு பிரச்சனைகளை இருந்து கட்டாயம் கேட்பார் இந்த ஆறு சட்டமன்றத்திலே ஒவ்வொரு இடத்திலும் அலுவலகம் போட போறோம் நீங்க பார்லிமென்ட் இருக்கும்போது டெல்லியில் இருப்பார் மத்த நேர தொகுதியில் இருந்து மக்களுக்காக உதவி செய்து நிச்சயமாக இந்த தொகுதிக்கு வேண்டிய எல்லா திட்டங்களையும் செய்து நமது விருதுநகர் தொகுதியை முதன்மையான தொகுதியாக கொண்டுவந்து படித்த படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அனைத்தையும் கொடுத்து இந்த தொகுதியை மேம்படுத்துவார்.
விஜய பிரபாகருக்கு வாய்ப்பு தருவீங்களா மற்றும் முரசு சின்னத்திற்கு வாய்ப்பு தருவீங்களா அவர் அப்படியே கேப்டன் மாதிரி தான் படிச்சவர் இளைஞர் அறிவாளி பல சவால்களை இந்த வயசுல சந்தித்தவர் கூடிய விரைவில் விருதுநகர் தொகுதியில் உங்கள் ஆசீர்வாதத்துடன் அவருக்கு திருமணம் நடக்கும். உங்களோடு நிச்சயம் இருந்து அத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்று கூறி முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.