பிரேமலதா விஜயகாந்த் தீவிர வாக்கு சேகரிப்பு!

பிரேமலதா விஜயகாந்த் தீவிர வாக்கு சேகரிப்பு!

வாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளர் ஜி. வி. கஜேந்திரனை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜி. வி. கஜேந்திரனை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது போளூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தவும், இந்தப் பகுதியில் அரசுக் கல்லூரி தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும், செய்யாறு சிப்காட் விரிவாக்கத்துக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் விவகாரத்தில் மேல்மா பகுதி விவசாயிகளுக்கு ஆதரவாக கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து நில மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பேசினார்.

Tags

Read MoreRead Less
Next Story