கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குரூப்-4 தேர்வு எழுத முன்னேற்பாடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குரூப்-4  தேர்வு எழுத முன்னேற்பாடு

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குரூப்-4 தேர்வு எழுத முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை 9ம் தேதி நடைபெறும் குரூப் 4 தேர்வில் 41,619 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (குருப் 4) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நாளை 9ம் தேதி நடக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தேர்வுகள் நடைபெறுவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை பேசியதாவது: குரூப் 4க்கான எழுத்துத் தேர்வு கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், திருக் கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய 5 வட்ட மையங்களில் 139தேர்வுக் கூடங்களில் 41,619 விண்ணப்பதாரர்கள் எழுத உள்ளனர்.

தேர்வாளர்கள் முறைகேட்டினைத் தடுக்கும் பொருட்டு 11 பறக்கும் படை அலுவலர்கள், 179 காவல் அலுவலர்கள்,

143 ஒளிப்பட பதிவாளர்கள், 138 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 34 சுற்றுக்குழு உறுப்பினர்கள் உட்பட 250க்கும் மேற்பட்ட வருவாய் துறை அலுவலர்கள், 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கலெக்டர் ஷ்ரவன்குமார் பேசினார்.

Tags

Next Story