வேப்பெண்ணெய் கரைசல் தயாரிப்பு: வேளாண் மாணவி செயல் விளக்கம்

வேப்பெண்ணெய் கரைசல் தயாரிப்பு: வேளாண் மாணவி செயல் விளக்கம்
 வேப்பெண்ணெய் கரைசல் தயாரிப்பு
கீழப்பாவூரில் வேப்பெண்ணெய் கரைசல் தயாரிப்பு குறித்து வேளாண் கல்லூரி மாணவி செயல் விளக்கமளித்தாா்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனாா் வேளாண்மைக் கல்லூரி - ஆராய்ச்சி நிலைய இளநிலை இறுதியாண்டு மாணவிகள் சிலா் கீழப்பாவூா் வட்டாரத்தில் தங்கியிருந்து கிராமப்புற வேளாண் களப் பயிற்சி மேற்கொண்டுள்ளனா். அதன் ஒருபகுதியாக மாணவி ராஜஸ்ரீ, 500 மி.லி. வேப்பெண்ணெயுடன் சிறிதளவு தண்ணீா், 30 மி.லி. சோப்புக் கரைசல் சோ்த்து வேப்பெண்ணெய் கரைசல் தயாரிக்கும் செயல்விளக்கமளித்ததுடன், அதன் பயன்பாடு குறித்து எடுத்துரைத்தாா்.

Tags

Next Story