அமைச்சர் உதயநிதியை வரவேற்க ஏற்பாடுகள் தீவிரம்

அமைச்சர் உதயநிதியை வரவேற்க ஏற்பாடுகள் தீவிரம்

ஏற்பாடுகளை ஆய்வு செய்யும் எம்.பி


தி.மு.க இளைஞரணி மாநாடு சேலத்தில் அடுத்த மாதம் 17-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டை பிரமாண்டமாக நடத்த தி.மு.க இளைஞரணிச் செயலாளரும், மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்துவருகிறார். மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றவிருக்கிறார்.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் தலைமையில், தி.மு.க-வின் இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் இரு சக்கர வாகனப் பிரசார பேரணியின் தொடக்க விழா நேற்று கன்னியாகுமரியில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் உதயநிதி இரு சக்கர வாகனத்தில் பேரணியாக செல்ல உள்ளார்.

இந்த நிலையில் வருகின்ற 18ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு இருசக்கர வாகன பேரணியில் வரும் அமைச்சர் உதயநிதியை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எம் பி எம் ஆன ராஜேஷ்குமார் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி நாமக்கல் மாவட்டத்திற்கு வெண்ணந்தூர் வழியாக வர உள்ளார். அதற்காக திமுக சார்பில் வெண்ணந்தூரில் அவரை வரவேற்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மதியம் 3 மணி அளவில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அமைச்சர் உதயநிதி திறந்து வைக்க உள்ளார். அந்நிகழ்ச்சிக்கு பிறகு நாமக்கல் சேலம் சாலையில் உள்ள பொம்மைக்குட்டை மேடு லட்சுமி திருமண மண்டபம் அருகே உள்ள திடலில் பிரம்மாண்டமாக மாநாடு நடைபெற உள்ளது எனவும் தெரிவித்தார். முன்னதாக எம் பி ராஜேஷ்குமார் மாநாடு திடலில் நடைபெறும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

Tags

Next Story