மதுரை மாவட்டம் முழுவதும் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் தொடக்கம்

மதுரை மாவட்டம் முழுவதும் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் தொடக்கம்

ஆட்சியர்

மதுரை மாவட்டம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகள் தொடங்கியுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மதுரை, தேனி, விருதுநகர் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய 10 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் அலுவலர்கள் பறக்கும் படை மற்றும் நிலைக்கண்காணிப்புக்குழுவினருடன் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கீதா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய : மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கீதா பேசுகையில் : மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட 10 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளோம், நாளை மறுநாள் துணை வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் மதுரை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை அமலான நிலையில் பொதுமக்கள் 49ஆயிரம் ரூபாய் எடுத்துச்செல்லலாம், பொதுமக்கள் G- VIGIL AND SUVITHA ஆகிய. செல்போன் APP மூலம் புகார் அளிக்கலாம் மற்றும் டோல்ப்ரீ 18004255799 , லேண்ட்லைன் எண்ணான : 0452-2535374, 375, 376, 377, 378 என்ற எண்களுக்கும் புகார் அளிக்கலாம்.

மதுரை மாவட்டத்தில் இன்று இரவு முதல் பறக்கும்படையினர் சோதனையை தொடங்கியுள்ளனர். வியாபாரிகள் எடுத்துசெல்லும் பணத்திற்கான உரிய ஆவணத்தினை வழங்கினால் பணம் விடுவிக்க நடவடிக்கை - இது போன்ற பணத்தினை பறிமுதல் செய்வது மற்றும் ஒப்படைப்பு தொடர்பாக தனியான குழு அமைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம், மதுரை மாவட்டத்தில் 26லட்சத்தி 77ஆயிரத்தி220 வாக்காளர்கள் உள்ளனர். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும்படையினர் , 3 நிலையான கண்காணிப்பு படையினர், ஒரு வீடியோ குழு என தலா 8 மணி நேரத்திற்கு ஒருமுறை சுழற்சிமுறையில் சோதனையில் ஈடுபடுவார்கள் வங்கிகளில் பணபரிமாற்றம் தொடர்பாக தினசரி வங்கிகள் அறிக்கைகளை சமர்பிப்பார்கள் எனவும்,

தினசரி வங்கி பண்பரிமாற்றத்தை தீவிரமாக கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஏற்கனவே அனைத்து வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம் என்றார். மதுரை மாவட்டத்தில் உள்ள பதட்டமான வாக்குச்சாவடி தொடர்பாக ஆய்வு செய்துவருகிறோம், வாக்குச்சாவடி மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டு தயார நிலையில் உள்ளது எனவும்,

சித்திரை திருவிழா தொடர்பாக ஏற்கனவே ஆலோசனைக்கூட்டத்தில் தெரிவித்த நிலையில் தற்போது சித்திரை திருவிழாவை கருத்தில் கொண்டு தேர்தல் வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story