வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி தயார்

வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி தயார்

வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி தயார், மக்கள் கருத்துக்களை தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி தயார், மக்கள் கருத்துக்களை தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி தயார் மக்கள் கருத்துக்களை தெரிவிக்க அழைப்பு தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பை சீரமைத்தல் தொடர்பாக இந்திய முத்திரை சட்டம் பிரிவு தமிழ்நாடு முத்திரை (சொத்துகளுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டி தயாரிப்பு மதிப்பீடு செய்தல், வெளியிடுதல் மற்றும் திருத்தியமைத்தலுக்காக மதிப்பீட்டு குழு ஏற்படுத்துதல்) விதிகள் 2010, விதிகளில் விதி 4(2)ன் படி மைய மதிப்பீட்டு குழு 2024 ஏப்ரல் 26ம் தேதி நிர்ணயம் செய்த நெறிமுறை கோட்பாட்டுக்கு இணங்க தஞ்சை மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழி காட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவேடு பொதுமக்கள் பார்வையிடும் வகையில் தாசில்தார், சார்பதிவாளர் அலுவலகங்கள் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் விவரங்கள் www.tnreginet.gov.in என்ற இணையதள முகவரியில் அனைவரும் தெரிந்துக் கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மீது ஏதேனும் ஆட்சேபனைகள் மற்றும் கருத்துரைகள் இருப்பின், அதனை 15 நாட்களுக்குள் ஆட்சியர் தலைமையிலான மதிப்பீட்டு துணைக்குழுவிடம் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்க பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story