மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 715 மனுக்கள் வழங்கல்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தின் போது பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 715 மனுக்களை நேரில் பெற்றுக்கொண்டார்.
குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கல்வி உதவித் தொகை, வங்கிக் கடனுதவி, முதியோர் உதவித் தொகை, வீட்டு மனைப்பட்டா, சாதிச்சான்று, வேலை வாய்ப்பு, விதவை உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை, மற்றும் உபகரணங்கள், சாலை வசதிகள், பிரதான் மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் வேளாண்மை துறை சார்ந்த பயிர்க்கடன்கள் புதிய நீர்தேக்க தொட்டி அமைத்து தருதல், தாட்கோ மூலம் கடனுதவி, கூட்டுறவு சங்ககளில் பயிர் கடன்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 715 மனுக்கள் பெறப்பட்டது.
மேலும், நிலுவையிலுள்ள மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விரிவாக ஆய்வு மேற்கொண்டு பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்திரவிட்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் படி இன்று செய்யார் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 85 மனுக்களும், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 57 மனுக்களும் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டது.
முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலர் மரு.மு.பிரியதர்ஷினி அவர்கள் தலைமையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை அனைத்து துறை அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மு.பிரியதர்ஷினி, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் ஆர்.மந்தாகினி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சிவா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் வி.வெற்றிவேல் (பொது) திருமால் (வளர்ச்சி மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
