பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல் - அமைச்சர் துவக்கி வைப்பு

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல் - அமைச்சர் துவக்கி வைப்பு

பொங்கல் தொகுப்பு வழங்கல் 

தாராபுரத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் துவக்கி வைத்தார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு , பொங்கல் பரிசு தொகுப்பு உடன் 1000 ரூபாய் பணம் வழங்கும் திட்டத்தை தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார் பேட்டையில் தொடங்கிவைத்தார். அதை தொடர்ந்து தாராபுரத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ் சின்னக்கடை வீதி அரசமரம் பகுதியில் உள்ள கூட்டுறவு விற்பனை சங்க சேமிப்பு கிடங்கு அலுவலக வளாகத்தில் உள்ள ஜின்னா மைதானம், வடக்குத்தெரு சின்னக்கடை வீதி சங்கர் ரைஸ் மில் வீதி போன்ற பகுதிகளைச் சேர்ந்த ரேஷன் கடைகளில். பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

பொங்கல் பரிசு தொகுப்பு தாராபுரத்தில் உள்ள 190 க்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு ஒரு கிலோ சர்க்கரை,ஒரு கிலோ பச்சரிசி, முழு கரும்பு, வேஷ்டி,சேலை, ரூபாய் 1000 என பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பரிசு பெறுவதற்காக காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பொங்கல் பரிசுத் தொகை 1000 மற்றும் பரிசுப் பொருட்களை பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன், வட்டாட்சியர் கோவிந்த ராஜ், தாராபுரம் திமுக நகர செயலாளர் முருகானந்தம், தாராபுரம் நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன், உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.

Tags

Next Story