செங்கனாங்கொல்லையில் பொங்கல் தொகுப்பு வழங்கல்

செங்கனாங்கொல்லையில் பொங்கல் தொகுப்பு வழங்கல்

பொங்கல் தொகுப்பு வழங்கல்

செங்கனாங்கொல்லையில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.

திருக்கோவிலுார் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஜி.அரியூர் மற்றும் பனப்பாடி கூட்டுறவு சங்கங்களின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

செங்கனாங்கொல்லையில் நடந்த நிகழ்ச்சிக்கு, கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளர் ராஜகுமாரி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கி துவக்கி வைத்தார்.

ஒன்றிய துணைச் சேர்மன் தனம் சக்திவேல், மாவட்ட கவுன்சிலர் ஜெய்சங்கர், ஒன்றிய துணைச் செயலாளர் செல்லமணி, மாவட்ட பிரதிநிதி பிரகாஷ், முன்னாள் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் உத்தரகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். ஊராட்சி தலைவர் செல்வி நன்றி கூறினார்.

Tags

Next Story