பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கல்

பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கல்

  பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கல்

சங்ககிரியில் 135 ரேஷன்கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி இன்று துவங்கியது.

தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்புகள் மற்றும் ரொக்க பணம் 1000ரூபாய் சங்ககிரி வட்டத்தில் உள்ள 135 ரேஷன் கடைகளில், 75719 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பணிகள் நடைபெற்றது. தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்க பணம் 1000 ரூபாய் வழங்கும் பணியினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் தொடக்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட 88 முழு நேர கடைகளும், 47 பகுதி நேர கடைகளும் மொத்தம் 135 கடைகளில் 75 ஆயிரத்து 719 குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்புகள் மற்றும் ரொக்கம் ரூ.1000 வழங்கும் பணியை சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சின்னாகவுண்டனூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினரும், திமுக சேலம் மேற்கு மாவட்ட அவைத்தலைவருமான தங்கமுத்து தலைமை வகித்து தொடங்கி வைத்தார். ஊராட்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story