பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கல்

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரையில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு, ஆயிரம் ரூபாய் பணத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்துள்ளது, இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் 282 நியாய விலைக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள 1,89,912 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு நீளக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரை பகுதியில் நடைபெற்றது , இதில் மாவட்ட ஆட்சியர் கற்பகம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும், நிகழ்வை துவக்கி வைத்தனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் 282 நியாய விலைக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள 1,89,912 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு நீளக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் ஆகியவை வழங்க ரூபாய்.21,05,76,325/- ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 10ம் தேதியான முதல் ஜனவரி 14ஆம் தேதி வரை 5 நாட்களிலும் நாளொன்றுக்கு 250 குடும்ப அட்டைதாரர்களுக்கு மிகாமல் சுழற்சி முறையில் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்குவதற்கு ஏதுவாக டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு, பொங்கல் பரிசுத் தொகுப்புகள் அனைத்து அங்காடிகளிலும் வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு ரூபாய் ஆயிரத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பை, ஒரு முழு நீள கரும்புடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்கள், நிகழ்ச்சியின் போது மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ராஜேந்திரன், நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன், ஒன்றிய குழு தலைவர் மீனா அண்ணாதுரை, நகராட்சி துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் பாண்டியன் , துணைப் பதிவாளர் ராமச்சந்திரன், பொது விநியோகத் திட்டதுணை பதிவாளர் சிவகுமார், சரகத் துணைப்பதிவாளர் இளஞ்செல்வி, மற்றும் அலுவலர் சாமிநாதன் உள்ளிட்ட கூட்டுறவுத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story