தாதகாப்பட்டியில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கல்

தாதகாப்பட்டியில்  பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கல்

பொங்கல் பரிசு தொகுப்பு 

சேலம் மாநகராட்சி, தாதகாப்பட்டியில் நடைபெற்ற பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சேலம் மாநகராட்சி , கொண்டலாம்பட்டி மண்டலம் 56-வது வார்டு தாதகாப்பட்டி தொட்டணன்காடு பகுதியில் உள்ள ரேஷன் கடையில் நேற்று பொதுமக்களுக்கு ரூ.1,000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு களை மாநகராட்சி சுகாதாரக்குழு தலைவரும், தாதகாப்பட்டி பகுதி தி.மு.க. செயலாளருமான ஏ.எஸ்.சரவணன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் அப்பகுதியில் 27 ரேஷன் கடைகளுக்கும் சென்று ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்.

இந்த பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, இலவச வேட்டி, சேலை மற்றும் ரூ.1,000 ரொக்கம் ஆகியவறை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. நெசவாளர் அணி அமைப்பாளர் ஓடெக்ஸ் இளங்கோவன், பகுதி துணை செயலாளர் ராஜசேகர், கவுன்சிலர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story