அங்களாம்மன் கோவிலுக்கு வெள்ளி கவச வலம்புரி சங்குகள் வழங்கல்

X
வலம்புரி சங்கு வழங்கல்
சங்ககிரி அங்காளம்மன் கோவிலுக்கு வாசவி கிளப் சார்பில் வெள்ளி கவசம் பொருத்தப்பட்ட 11 வலம்புரி சங்குகளை வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம், சங்ககிரி வாசவி கிளப் சார்பில் ஆன்மீக சேவை திட்டத்தின் கீழ் அருள்மிகு அங்காளம்மன் கோவிலுக்கு ரூ.60 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி கவசம் பொருத்தப்பட்ட 11 வலம்புரி சங்குகளை பூசாரியிடம் வழங்கினர். அப்போது வாசவி கிளப் துணை ஆளுநர் வெங்கடேஸ்வரகுப்தா, மண்டல தலைவர் ஆனந்த், பிராந்திய தலைவர் சரவணபிரசாத், சங்ககிரி கிளப் துணைத்தலைவர் முரளிதரன், பொருளாளர் ஜெயக்குமார், முன்னாள் தலைவர்கள் வசந்தி, டி.விஸ்வநாதன், முன்னாள் பொருளாளர் ரேவதி உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.
Next Story
